News Just In

6/23/2025 08:40:00 AM

நீதி வேண்டி செம்மணியில் ஏற்றப்படும் 'அணையா தீபம்'; இன்று ஆரம்பமாகும் போராட்டம்

நீதி வேண்டி செம்மணியில் ஏற்றப்படும் 'அணையா தீபம்'; இன்று ஆரம்பமாகும் போராட்டம்




யாழ்ப்பாணம் - செம்மணியில் 'அணையா தீபம்' மூன்று நாள் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிகோரி மக்கள் செயல் அமைப்பு அணையா தீபம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக செம்மணி வளைவு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இப்போராட்டம் இரவு பகலாக மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.




இதேவேளை, செம்மணி அணையா தீபம் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிந்துபாத்தி புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: