அனுரகுமார ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்!

அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த வார இறுதியில் இலங்கையில் தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டு போரின் போது கொல்லப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கு கடந்த 16 வருடங்களாக செய்வதை போல ஒன்று திரண்டாhர்கள்.
அவர்கள் நீதிக்கான வேண்டுகோளையும் விடுத்தார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுக்கள் பாதுகாப்பு படையினர் யுத்த குற்றங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான பெருமளவு ஆதாரங்களை வைத்திருக்கின்ற போதிலும்இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுக்க தவறிவிட்டனர்.
அதேவேளை தமிழ் செயற்பாட்டாளர்களும்பாதிக்கப்பட்ட சமூகத்தினரும்இஒடுக்குமுறை உட்பட ஏனைய மீறல்களை தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போரில் இரு தரப்பும் பெருமளவு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகளை நெருங்கிய பாதுகாப்பு படையினர் 2009 மே 18ம் திகதி அவர்களை தோற்கடித்ததை தொடர்ந்துபடையினர் கொலைகள்பாலியல் வன்முறைசரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகளை பலவந்தமாக காணாமலாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
புலிகளால் யுத்தசூன்ய வலயத்தில் சிக்கிக்கொண்ட மக்கள் மீது படையினர் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். படையினர் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர்.

அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
ஆனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீடுகளிற்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்களின் தோல்வியடைந்த முயற்சிகளை திசநாயக்க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது ஆதரிக்கின்றது.
ஆனால் இவை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லைஇஇந்த நிறுவனங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் பலர் நிராகரித்துள்ளனர்.அவர்கள் அவற்றை தோல்வியடைந்த ஒரு வாக்குறுதியாகவே பார்க்கின்றனர்.
இதற்கிடையில் தமிழர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் எதிர்கால வழக்குகளில் பயன்படுத்த சர்வதேச குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவ வேண்டும் என்றும் ஆணைவழங்கியது.. அந்த ஆணைகள் செப்டம்பரில் புதுப்பிக்கப்பட உள்ளன. இலங்கையில் முன்னேற்றம் இல்லாததால் சர்வதேச குற்றங்களைச் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு புதுப்பித்தல் மிக முக்கியமானது. திசாநாயக்க அரசாங்கம் மனித உரிமை பேரவையின் தலையீட்டை “பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும்” என்று எதிர்த்துள்ளது.
மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் செயல்படுவதாக பாசாங்கு செய்வதற்குப் பதிலாக பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் மற்றும் இறுதியில் நீதியை வழங்குவதற்காக பாடுபட வேண்டும்.
No comments: