News Just In

5/16/2025 02:27:00 PM

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி



2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய உப்பு நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம். ஏனெனில் கடந்த 2024ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் கடந்த ஆண்டில் வெறுமனே 40 ஆயிரம் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை ஒரு தொன் உப்பைக் கூட உற்பத்தி செய்து கொள்ள முடியவில்லை.

ஆனையிறவு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட அனைத்து உப்பளங்களும் சீரற்ற காலநிலை காரணமாக முடங்கிப் ​போயுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்

No comments: