அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஸான் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மஞ்சுள ரத்நாயக்க அவர்களின் தலைமையில் இன்று(16.05.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ.ஆதம்பாவா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர், எம்.எஸ் உதுமான் லெப்பை, முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தி இறக்காம பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இறக்காமம் பிரதேச பிரச்சினைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
No comments: