
சபாநாயகர் சபையில் ஒரு பொம்மைப் போல இருக்கிறார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சபை அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விகுறியாக உள்ளது. நாட்டில் பாதுகாப்பு சீராகவும் இல்லை, எத்தனையோ சாதாரணமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
நேற்றைய தினம் கூட கொழும்பில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யாரை கொல்லுவதற்காக கொண்டுவரப்பட்டதோ தெரியவில்லை. தனிப்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையா? மனிதனின் உயிர் போனப்பிறகா பாதுகாப்பு கொடுக்கப்போகிறீர்கள், மக்கள் பிரதிநிதிகளான எங்களின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு என இந்த சபையில் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது. ஆனால், சபாநாயகர் இந்த சபையில் ஒரு பொம்மை போல இருக்கிறார். ஒருநாள் கூட எம்.பிக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. 24 வருடம் பாராளுமன்ற அனுபவத்தில் இப்படியான ஒரு பொம்பை சபாநாயகர் இருந்தது கிடையாது என தெரிவித்துள்ளார்.
No comments: