இலங்கை மருத்துவக் கல்லூரிகள் கவுன்சிலின் புதிய பதிவாளராக பேராசிரியர் ஜெனிபர் பெரேரா நியமனம்
இலங்கை மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் (CMCC) புதிய பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் ஜெனிபர் பெரேராவை நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நடவடிக்கை எடுத்தார், அதற்கான நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவருக்கு வழங்கினார்.
இந்த நியமனம் மருத்துவ கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளது. ஜெனிஃபர் பெரேரா, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சிறந்த சேவையைச் செய்த ஒரு பேராசிரியர் ஆவார். அவர் 2015 முதல் 2020 வரை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றினார், மேலும் இலங்கை மருத்துவ கவுன்சிலின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 1986 இல் மருத்துவ நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார் அதன்பின் 2001 இல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். காசநோய் போன்ற தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் நவீன மூலக்கூறு உயிரியல் முறைகள் குறித்து அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்தியது.
மேலும் பேராசிரியர் ஜெனிஃபர் பெரேரா நடத்திய ஆராய்ச்சி தேசிய அறிவியல் துறையில் ஏராளமான ஜனாதிபதி விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு மருத்துவ பாடத்திட்டத்தை மறுசீரமைப்பதில் முன்னோடியாக இருந்த இவர், மருத்துவக் கல்வி சீர்திருத்தங்களுக்கும் பங்களித்துள்ளார். மேலும், சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோய்கள் குறித்த ஆலோசனைக் குழு மற்றும் தேசிய பெண்கள் குழு உள்ளிட்ட தேசிய குழுக்களுடன் தனது தொழில் திறமையை பகிர்ந்து வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
பேராசிரியர் ஜெனிபர் பெரேரா, இலங்கை நுண்ணுயிரியலாளர்கள் நிறுவனம் மற்றும் தேசிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். அவர் இலங்கை மருத்துவ சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார், மேலும் 2015 இல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியராக உள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS மற்றும் MD பட்டங்களையும், டண்டீ பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியில் முதுகலை டிப்ளோமாவையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மகளிர் படிப்பில் முதுகலை டிப்ளோமாவையும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். பேராசிரியர் ஜெனிபர் பெரேரா வயம்ப பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் துணைப் பேராசிரியராகவும், மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்
5/29/2025 12:53:00 PM
Home
/
Unlabelled
/
இலங்கை மருத்துவக் கல்லூரிகள் கவுன்சிலின் புதிய பதிவாளராக பேராசிரியர் ஜெனிபர் பெரேரா நியமனம்!
இலங்கை மருத்துவக் கல்லூரிகள் கவுன்சிலின் புதிய பதிவாளராக பேராசிரியர் ஜெனிபர் பெரேரா நியமனம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: