News Just In

4/05/2025 08:25:00 AM

இலங்கைக்குள் MI-17 உலங்கு வானூர்திகளில் அதிரடியாக நுழைந்த 40 விசேட இந்திய விமானப்படை வீரர்கள்!


இலங்கைக்குள் MI-17 உலங்கு வானூர்திகளில் அதிரடியாக நுழைந்த 40 விசேட இந்திய விமானப்படை வீரர்கள்




இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நகர்வில் இந்தியா தற்போது அதிதீவிரமாக செயற்பட்டு வருகிறது.

அதன் ஒரு அங்கமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை அமையப்பெற்றுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையம் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவரின் வருகையை முன்னிட்டு அதிதீவிர பாதுகாப்புக்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாய் உள்ளது.

இதில் குறிப்பாக அவருடைய பாதுகாப்புகாக இந்தியாவில் இருந்து சிறப்பு வாகனங்களுடன் இந்திய உளவுப்பிரிவின் விசேட அதிகாரிகளும் இலங்கையில் நிலைகொண்டுள்ளனர்.

அத்தோடு இந்திய விமானப்படை, மற்றும் அந்நாட்டு இராணுவத்தின் விசேட படைப்பிரிவகளும் இலங்கையை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் முக்கியமாக இந்தியாவின் MI-17 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுவதற்காக தெரிவிக்கப்படுகிறது.

மோடியின் வருகையின் போது, ​​நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறைத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: