இந்தியாவில் இருந்து உயர்மட்ட பிரபு பாதுகாப்புக் குழு இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட இந்த குழு இலங்கைக்கு வந்துள்ளது.
அத்துடன் உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கவும் இந்த பிரபு பாதுகாப்புக் குழு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் காரணமாக கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: