மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, நிந்தவூர், கல்முனை, கல்முனை உப பிரதேச செயலகங்கள் உடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது.
இச் செயற்றிட்டத்தின் முக்கிய செயற்பாடாக துறைசார்ந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டு இலங்கையில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக செல்பவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு விதிமுறைகளை பின்பற்றி செல்ல ஊக்கப்படுத்தல் மற்றும் அதில் காணப்படும் நடைமுறை பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவதற்கான பரிந்துரைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியாழ் தலைமையில் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ், ஆய்வு வழிநடத்துனராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
பங்குபற்றுனர்களாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் துறைசார்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்
No comments: