சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முன்பள்ளிகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்தல் தொடர்பான அறிமுக நிகழ்வு இன்று (03) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
இதன் போது முன்பள்ளிப் பாடசாலைகளை சுகாதார மேம்பாடுடைய பாடசாலைகளாக மாற்றுவது சம்பந்தமாகவும், அனைத்து முன்பள்ளி பாடசாலைகளையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்வதன் நன்மைகள் மற்றும் அவசியம் பற்றியும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களால் தெளிவூட்டப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.பைறூஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக உளவள ஆலோசகர், முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தாதிய சகோதரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் பாடசாலை பற் சிகிச்சையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
No comments: