News Just In

3/01/2025 08:21:00 PM

ராஜபக்சர்களுக்கு வலைவீசும் அநுர அரசு!


ராஜபக்சர்களுக்கு வலைவீசும் அநுர அரசு - 
மாந்தீரிகத்திற்குள் மறையும் மகிந்த குடும்பம்



சமகால அரசாங்கத்தின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் வலுப்பெற்றுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும்(Namal Rajapaksa ), தனது குடும்பம் மீதே அநுர அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் நாமல் உட்பட பல ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மாந்தீரிகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள மகிந்த குடும்பம் , தம்மை பாதுகாக்கும் முயற்சியில் பல்வேறு சமய நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் நாமல் ராஜபக்ச குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தங்காலையிலுள்ள மகிந்த வீட்டில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டதுடன், மகிந்த சொத்துகளில் சிலவற்றின் பினாமியாக செயற்படும் டெய்ஸி ஆச்சி அல்லது டெய்சி பொரஸ்ட் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி. வி. சானக மற்றும் நெருங்கிய குழுவினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

No comments: