News Just In

2/02/2025 05:12:00 PM

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பழங்கள் கல்முனையில் கைப்பற்றப்பட்டன !

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பழங்கள் கல்முனையில் கைப்பற்றப்பட்டன !


நூருல் ஹுதா உமர்

கல்முனை நகர் பகுதியின் பிரதான வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.

கல்முனை நகரில் பழுதடைந்த தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, (31) குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த பழங்களைக் கைப்பற்றியதுடன் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஷ், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.


No comments: