News Just In

2/12/2025 08:05:00 PM

ஆளுநர் அற்ப பதவிக்காக தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் - சட்டத்தரணி சுகாஷ்


ஆளுநர் அற்ப பதவிக்காக தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் - சட்டத்தரணி சுகாஷ்


சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை அகற்றுமாறு இன்று(12) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண ஆளுநர் தனது பதவியை தக்க வைப்பதற்கும் எதிர்காலத்தில் பதவிகளை எதிர்பார்ப்பதற்கும் தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார்.

அதேபோல் அரசியல் கோமாளி ஒருவரும் தையிட்டி விகாரையை அகற்றக்கூடாது என கூறி வருவது திட்டமிட்ட அரச முகவர்களாக இவர்கள் செயல் படுகிறார்கள்.

தையிட்டி சட்டவிரோத விகாரை போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை பார்த்திருப்பார்கள் மக்களின் உணர்வுகளை அறிந்திருப்பார்கள்.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தின் அணுசரணையுடன் கட்டப்பட்ட தையிட்டி விகாரைக் காணி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் . மக்கள் தமது கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் மக்களின் காணிகள் மக்களுக்கே வேண்டும் மாற்றுக் காணிகளை ஏற்க மாட்டோம்.

ஆகவே சட்ட விரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் பதவிகளுக்காக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை அரசின் முகவர்கள் நிறுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்

No comments: