News Just In

2/24/2025 06:05:00 PM

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் 3000வது நிறைவு நாளில் மரணமான தாய்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் 3000வது நிறைவு நாளில் மரணமான தாய்



வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (24) தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.

இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.

இதேவேளை, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: