News Just In

2/12/2025 07:51:00 PM

மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் அரிசி மூடைகள் கைப்பற்றல்!

மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் அரிசி மூடைகள் கைப்பற்றல்



கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நிறையுடைய மூவாயிரம் அரிசி மூடைகள் இன்று புதன்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அரிசி தொகையானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments: