Westminster Foundation for Democracy (WFD) என்னும் இலங்கைக்கான அலுவலகம், 2025 ஜனவரி 21 முதல் 24 வரை நாட்களில் பிலிப்பைன்ஸின் முஸ்லிம் மின்டானாவோவில் (BARMM) உள்ள பாங்சமோரோ தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் குழுவை சேர்ந்தவர்களுக்கான ஓர் பிராந்திய கற்றல் முகாம் ஒன்றை நடாத்தியது. இந்த முயற்சி பரஸ்பர கற்றலை வளர்ப்பதற்கும் அரசியல் கட்சிகளின் மேம்பாடு, நிர்வாகம் மற்றும் நாடுகளில் காணப்படும் மோதலுக்குப் பிந்தைய மாற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இவ் செயலமர்வானது பேருதவியாக அவர்களுக்கு அமைந்தது .
பாங்க்சமோரோ பகுதி, இலங்கை போல், முக்கிய அரசியல் மாற்றங்களை சந்தித்து, பல தசாப்தங்களாக நீடித்த உள்ளூர் மோதலுக்கு பின்னர் அமைதியான மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக அமைப்பை கட்டியெழுப்ப போராடி வருகிறது. இலங்கையின் சுமுகமான தேர்தல்களை நடத்துவதில் கற்றல் மற்றும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துவதில் இதுவரை ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை, பாங்க்சமோரோவின் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாகக் கருதலாம்! இவ் குழுவானது இலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் பங்காளிகள், குறிப்பாக NPP, SJB, UNP, SLPP, SLMC மற்றும் ITAK கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சந்தித்து அவர்களுடனான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார்கள்.
No comments: