முன்னாள் CCD பணிப்பாளர் விளக்கமறியலில்
கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி. கே. பரனலியனகே இன்று (13) உத்தரவிட்டார்.
14 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஒருதலைப்பட்சமாக சொத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்து இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குருவிட்ட இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வந்து தனது சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான சொத்து பலாத்காரமாக அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, உரிய விசாரணையின்றி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ திறந்த நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
12/13/2024 05:43:00 PM
முன்னாள் CCD பணிப்பாளர் விளக்கமறியலில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: