(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினதை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனமும் இணைந்து மட்டக்களப்பில் நிகழ்வுகளை நடத்தின.
“உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலிருந்து “உனது நலனுக்காக தீர்மானம் எடுப்பதில் உனக்காக நான் துணை நிற்பேன்” எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ். அருள்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கூடவே, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். சிவலிங்கம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே. இளங்குமுதன், சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.
No comments: