பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (டிசெம்பெர் 6) முன்னர் தத்தமது வருமான அறிக்கையைச் சமர்ப்பிப்து அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் நள்ளிரவுக்கு முன்னர் அறிக்கைகளை வெவ்வேறாகத் தயாரித்து தாம் போட்டியிட்ட மாவட்டத்துக்குப் பொறுப்பான தேர்தல்கள் தெரிவத்தாட்சி உத்தியோகத்தரி;டம் கையளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தேர்தலில் போட்டியிடாது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது வருமான அறிக்கையை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தமது வருமான அறிக்கைகளை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments: