News Just In

12/13/2024 06:03:00 PM

கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்த சாதனை! சென்னை ஆராய்ச்சியாளர்

கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்த சாதனை! சென்னை ஆராய்ச்சியாளர்



கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கருவின் மூளை வளர்ச்சியை படம் பிடித்து சாதனை

மனித மூளை, இயற்கையின் மிகவும் சிக்கலான அமைப்புகளில் ஒன்று. அதன் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த முயற்சியில் ஒரு புதிய மைல்கல்லை சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

கருவின் மூளை வளர்ச்சியை அதாவது 5,132 பகுதிகளை மொத்தமாக பகுப்பாய்வு செய்து முப்பரிமாண டிஜிட்டல் படமாக உருவாக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மூளை குறித்த ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், வளரும் கருவின் மூளையை இவ்வளவு துல்லியமாக படம் பிடித்தது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை, மூளை தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருவில் உள்ள குழந்தையின் மூளை எவ்வாறு வளர்கிறது என்பதைப் பற்றிய புதிய பார்வையை இந்த ஆராய்ச்சி வழங்குகிறது.

இதன் மூலம் மூளை தொடர்பான பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மூளை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும்.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி (Journal of Comparative Neurology) இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: