News Just In

11/01/2024 03:17:00 PM

அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தினரை சந்தித்த பிரதமர்!

அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தினரை சந்தித்த பிரதமர்



பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், தரமானதாகவும், செயற்திறனுடனும் முன்னெடுத்துச் செல்வதில் சமகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன

தாதியர் கல்வி உலகளாவிய தேவைக்கமைய புதுப்பிக்கப்படாமை, தாதியர் யாப்பு, சேவை யாப்புகளில் காணப்படும் பிரச்சினைகள், தாதியர் சபை, கடந்த கால அரசாங்கங்களின் புறக்கணிப்பு, தாதியொருவர் உயிரிழக்கின்றமை, தாதியர் பற்றாக்குறை, தாதியர் சேவை நாடளாவிய ரீதியிலான சேவையாக காணப்படாமை, சமூக சுகாதார தாதியர் சேவை உரிய முறையில் ஸ்தாபிக்கப்படாமை,

நாட்டின் அபிவிருத்திக்கென நேரடியாக தாதியர் சேவையை பயன்பாட்டிற்கு எடுக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தனர்

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் வைத்தியர் அசங்க விக்கிரமசிங்க, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதம செயலாளர் என்.பீ.மெதவத்த, தலைவர் ரவிந்த்ர கஹதவ ஆரச்சி, ஒருங்கிணைப்பு செயலாளர் அமில ரத்னாயக்க, பொருளாலர் சுரேன் தவுலகல, கல்வி செயலாளர் பிரபாத் பிலிபான, உப தலைவர் சஞ்ஜீவ முணசிங்க, உப செயலாளர் சமன் விஜேதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: