காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான கார்த்திகேசு உருத்திரகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
தனது கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: