சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எங்கள் நாடு எல்லா வகையிலும் பிளவுபட்டுள்ளது. ஆனால் நம் நாட்டால் இப்படி பிரிந்து முன்னேற முடியாது.
இந்தப் பிரிவினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதே எங்களின் பிரதான நம்பிக்கை. இணைப்பதற்கு என்ன நடக்க வேண்டும்? சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள், தலைவர்கள் இணைந்து ஒரு இயக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
அந்த இயக்கம் தான் தேசிய மக்கள் சக்தி. அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் இயக்கம் வெற்றிபெற வேண்டும். அதுதான் திசைகாட்டியின் வெற்றி. வடக்கில் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென்பதை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்.
பெரும் அழிவை ஏற்படுத்திய போர் நடந்தது. ஆனால் அரசியல் கைதிகள் உள்ளனர். எனவே சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பெற்று அவர்களை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்
No comments: