News Just In

10/27/2024 08:45:00 AM

ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்காக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி!


ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்காக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி


ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்காக தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றையதினம் (26.10.2024) தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.


அதனால், எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.


இந்தநிலை, மாறவேண்டுமானால், தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத்தின் தேவை எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

No comments: