எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 27, 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: