News Just In

9/17/2024 12:44:00 PM

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஏ.ஏ.எம்.ஆதிப் இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL)நடத்திய புத்தாக்கப் போட்டியில் தேசிய விருது பெற்றார்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL) , மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாடு தளுவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் ஒழுங்கு செய்திருந்த புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் புத்தாக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தர விஞ்ஞான கணிதப் பிரிவில் கல்வி கற்ற மாணவன் ஏ.ஏ.எம்.ஆதீப் தனது கண்டுபிடிப்பினனை சமர்ப்பித்து கிண்ணத்தையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

இம் மாணவன் ஏற்கனவே பல தடவைகள் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருதுகளை பெற்றுள்ளதாகவும் இம் மாணவனுக்கு கல்லூரி கல்வி சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தெரிவித்தார்.

நாடு தளுவிய ரீதியில் 70 மாணவர்கள் பங்கேற்ற இப் போட்டியில் 3 மாணவர்கள் மட்டுமே தேசிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: