(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக மாஸ் மீடியா கழகம் அகில இலங்கை ரீதியில் இணையத்தளத்தினூடாக நடாத்திய அறிவிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் இருவர் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய ரீதியில் 14 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியைச் சேர்ந்த எம்.ஏ.என்.எம்.காயிட் கைஸ் மற்றும் எம்.ஆர்.எம்.றிமாஸ் ஆகிய இரு மாணவர்களும் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்திலிருந்து 4 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
No comments: