(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து இவ் வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையில் ஒப்பமிடுதலும், அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
பரீட்சையின் போது மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் முன்வைக்கப் பட்டதோடு, பரீட்சை எழுதும் வரைக்கும் வழமைக்கு மாறான உணவுப் பழக்க வழக்கங்களை முற்றாக தவித்துக் கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்குமேல் சித்தி பெறவேண்டும் என வாழ்த்தி, இனிப்புப் பண்டங்களும் வழங்கி ஆசிர்வதிக்கப்பட்டனர்.
ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் டி கே. எம்.மௌசீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர் .எம்.ரீ. ஏ. முனாப் , பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், தரம் ஐந்து கற்பிக்கும் ஆசிரியை மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: