News Just In

9/19/2024 08:58:00 AM

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்!




இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியா தனது பலத்தை நிரூபிக்க 10 றோ அதிகாரிகளை வடமாகாணத்தில் களமிறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது இந்தியா தனக்கு சாதகமான வேட்பாளரை மிக துள்ளியமாக ஆராய்ந்து இறுதிக்கட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் ஜே.வி.பிக்கான ஆதரவு படலத்தை எஞ்சியுள்ள இரண்டு தினங்களில் உடைக்க தீவிரமாக மூன்று தளபதிகளை களத்தில் இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பின்னணியில் 20 ஆம் திகதி முக்கிய பாய்ச்சல்நடவடிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க நகர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

No comments: