(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவி றொபேக்கா 16 வயதிற்குட்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர், 110 மீற்றர் சட்டவேலி போட்டிகளிலும்,
நகுலேஸ்வரன் டாரிகா 18 வயதிற்குட்பட்ட குண்டு போடுதலுடன், தட்டெறிதல் போட்டியில் 27.54 மீற்றர் தூரம் எறிந்து புதிய கிழக்கு மாகாண சாதனையுடனும் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாண மட்ட போட்டியில் கபடி அணியும் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் , வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய விளையாட்டு பயிற்று விப்பாளர்களான திரு.நிக்கோல் நிசாந்தன், திருமதி.பிரதீஸ்கரன் நிரஞ்சலா , உடற்கல்வி ஆசிரியர் செல்வி.க.லதா ஆகியோருக்கு பாடசாலை அதிபர் திரு.வல்லிபுரம் முருகதாஸ் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments: