News Just In

9/18/2024 07:40:00 PM

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பகுதிஆழ்கடல் மீனவர்களின் நன்மை கருதி மீன்பிடி நங்கூரமிடும் தளம் அமைக்க நடவடிக்கை!

அமைச்சர் டக்லஸ் கருத்து

(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
பொருளாதாரநெருக்கடிக்கு மத்தியிலும் மீனவர்களின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீனவர்களுக்கு எரிபொருள் மானி யம் வழங்க முன் வந்துள்ளார் எதிர்காலத்தில் மீனவர்களின் நலன் கள் கருதி பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்கள் முன்னெ டுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் கடல் தொழில் நீரி யல்வள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியில் நடைபெற்ற மீனவர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்டார் .

வடமேல் மாகாண ஆளுநரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல மைச்சருமான அல்ஹாபில் நசீர் அகமத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர் பீ.ரீ.ஏ லத் தீப் ஆகியோர் விடு த்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டக்ளிஸ் தேவானந்தா நேற்று மாலை இப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தி ருந்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் கடத்தொழில் பிரதி அமைச்சர் மர்ஹூம் மொஹை தீன் அப்துல் காதர் இப்பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரங்கள் பெருமளவில் காணப்படுவதால் இப் பிரதேசத்தில் இயந்திரபடகுகள் தரித்து நிற்பதற்கு நங்கூரமிடும் தளம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்திருந்தார். 2019 ல் இப் பிரதேசத்தில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் இம்முயற்சி கைவிட கைகூடப்படாமல் இருந்தது பற்றி இப்பிரதேச மீனவர்களால் அமைச்சர் டக்லைஸ் தேவானந்தாவுக்கு எடுத்துக்கூறப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் திட்டம் இப்ரதேசத்தில் அமைய வேண்டும் என்பதில் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமதும் பலதடவை முயற்சிகள் எடுத்தும் நிறைவேறவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது

கோரிக்கையினை கேட்டறிந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா இப்பிரதேச ஆழ்கடல் மீனவர்களின் நன்மை கருதி தேர்தலின் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதே போல மீனவர்களின் அத்தியாவசிய தேவையான கடல் தொழில் பாதை மீன்பிடி இயந்திரங்கள் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா இங்கு வாக்குறுதி அளித்தார்.

அமைச்சர் டக்லாஸ் தேவானந்தா இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;- இந் நாட்டு மீனவர்களின் நலனில் பெரும் அக்கறையு ள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவதன் மூலம் இந்நாட்டு மீனவர்களின் நலனில் கூடுதலான அபிவிருத்திகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார் .

இந்த மீனவர்களுடான விசேட சந்திப்பில் விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலி சாகிர் மௌலானா மற்றும் இப்பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் இங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

இந்த மீனவர்களுடான விசேட சந்திப்பில் விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலி சாகிர் மௌலானா மற்றும் இப்பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் இங்கு பிரசன்னமாகி இருந்தனர்

No comments: