News Just In

9/07/2024 03:37:00 PM

நுவரெலியா, தலவாக்கலை தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

நுவரெலியா, தலவாக்கலை தமிழ் தேசிய பாடசாலை தமிழ்மொழித்தின போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாண 1001 இற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீத, நடன போட்டியில் நுவரெலியா, தலவாக்கலை தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் மூன்று போட்டிகளிலும் முதலாம் இடம் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளனர்

பிரிவு 2 தனி இசைப் போட்டியில் ஹரிஹரன் முதலிடத்தையும்,
பிரிவு 5 தனி இசைப் போட்டியில் பிரகாஷினி முதலிடத்தையும்,
பிரிவு 5 சிரேஷ்ட பிரிவு தனி நடனப் போட்டியில் ரதிக்சலா முதலிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments: