News Just In

9/07/2024 03:41:00 PM

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மருந்துப் பொருட்களின் வருடாந்த மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கான பட்டறை!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

சுகாதாரத் திணைக்களத்தின் மருத்துவ விநியோகப் பிரிவு 2025 ஆம் ஆண்டுக்கான மருந்துப் பொருட்களின் வருடாந்த மதிப்பீடுகளை தயாரிக்கும் பொருட்டுவிழிப்புணர்வு பட்டறைகளை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 2025 ஆம் ஆண்டுக்கான மருந்துப் பொருட்களின் வருடாந்த மதிப்பீடுகளை தயாரிக்கும்விழிப்புணர்வு பட்டறை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பிராந்திய மருந்தாளர் திருமதி எஸ்.இந்திரகுமாரினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த பட்டறை கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரின் வரவேற்பு உரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள், கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பல் வைத்தியர்கள் பிரதம மருந்தாளர்கள் மற்றும் பிராந்திய மருந்துக் களஞ்சியசாலை பொறுப்பதிகாரி, மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள் என சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டெடுனு டயஸ் Zoom தொழிநுட்பத்தினூடாக பங்கேற்று துல்லியமான மதிப்பீட்டின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.

மருந்து விநியோகப் பிரிவின் எஸ்.ஏ.எஸ்.சந்திரப்பெரும (AD/ICT) ஆண்டு மதிப்பீட்டின் நோக்கம் தொடர்பாகவும், திரு.இஹ்ஜாஸ் (ICT Officer - MSD) ஸ்வஸ்தா அமைப்பில் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் குறித்த நிகழ்வில் விரிவுரையாற்றினர்.

மருந்துப் பொருட்களின் வருடாந்த மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கான பட்டறை "ஸ்வஸ்தா" முறைமையின் கீழ் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: