News Just In

9/21/2024 08:15:00 PM

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்!




திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி சில நிமிடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 மற்றும் 6 ஆம் திகதிகள் வரை இடம்பெற்றது.

மேலும், இந்த நாட்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12ம் திகதிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

No comments: