News Just In

9/15/2024 07:35:00 PM

தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்களோடு, மட்டக்களப்பில் மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்





தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம்மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் போராட்ட முன்னணி சார்பில், நுவன் போபகே போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து, போராட்ட முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தர்மலிங்கம் கிருபாகரனின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.

போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே பிரதான உறுப்பினராகக் கலந்துகொண்டதோடு, முன்னணியின் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments: