News Just In

8/29/2024 08:42:00 PM

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் ஆனிஸ் அஹமட் சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.




(அஸ்ஹர் இப்றாஹிம்)

பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முகம்மது சஜீர் ஆனிஷ் அஹ்மத் சித்தியடைந்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனா நாட்டில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பியாட் பரிசளிப்பு நிகழ்விற்கு இலங்கையிலிருந்து செல்லும் மாணவர் குழுவில் தனது நாமத்தையும் பதிவு செய்துள்ளார்.

அம் மாணவச் செல்வனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை
அதிபர் எம்.ரீ.ஜனோபர் தலைமையில் இடம்பெற்றது.

No comments: