(அஸ்ஹர் இப்றாஹிம
சீகிரியா - இலுக்வல்ல பிரதேசத்தில் கரடி தாக்கியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் தம்புள்ள மற்றும் பொலன்னறுவ வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஒருவர் தனது வீட்டுக்கு வெளியிலுள்ள மலசல கூடத்திற்கு செல்லும் போதும், மற்றையவர் வீட்டுக்கு வெளியில் வெற்றிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் கரடித் தாக்குதலுக்கு உள்ளானதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments: