(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தின் இலவச மதிய உணவு பரிசோதனைக் குழுவினரின் தகவலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பாடசாலையில் வழங்கப்பட்ட கௌபி பயறினை பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயறில் புழுத்தாக்கத்திற்கு உள்ளான நிலையில் காணப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர் அவர்களின் ஆலோசனையின் பேரில், குறித்த மதிய உணவு வழங்குனரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவருக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டதோடு நீதவானால் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை உணவு வழங்கல் ஒரு பொறுப்பு வாய்ந்த பணி. இது தொடர்பாக அனைவரும் பொறுப்புடன் இருந்து அதன் பிரயோசனத்தை மாணவர் சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
No comments: