News Just In

8/02/2024 10:19:00 AM

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு!




ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

No comments: