(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக மட்டக்களப்பு நோக்கி பயணித்த குடும்பமொன்றே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஜீப்பில் பயணித்த மூவர் படுகாயமுற்ற நிலையில் மகாஓயா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவ் விபத்து சம்பந்தமாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: