News Just In

8/01/2024 10:34:00 AM

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் கௌரவிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் அண்மையில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் (Champion) பட்டத்தையும் 17வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேசிய மட்ட போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்தும் நோக்கில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு
கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் கல்முனை வலய கல்வி பணிமனையின் உடற்கல்வி பொறுப்பான உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், விஷேட அதிதியாக
கல்முனை வலய கல்வி பணிமனையின் உடற்கல்வி ஆசிரிய வளவாளர் ஏ. முகம்மது அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: