News Just In

8/01/2024 10:31:00 AM

கல்முனை ஸாஹிரா கிறிக்கட் அணி ,பதியத்தலாவ தேசிய பாடசாலை அணியை 2 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டது

17 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிறா தேசியக் கல்லூரி அணியினர் 2 விக்கட்டுக்களால் வெற்றி


(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் III, 17 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி ,அம்பாறை பதியத்தலாவ தேசிய பாடசாலை அணியுடன் முதலாவது சுற்றின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய பதியத்தலாவ தேசிய பாடசாலை அணியினர் 38.3 ஓவர்கள் முடிவில் சகல வீக்கட்டுக்களை இழந்து 150 ஒட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை ஸாஹிரா அணி 17.2 Over களில் 8 விக்கட்டுக்களை இழந்து 154 ஒட்டங்களை பெற்று 2 விக்கட்டுக்களால் முதலாவது சுற்றின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்றனர்.

No comments: