News Just In

8/02/2024 01:52:00 PM

கிண்ணியா இலங்கை வங்கிக் கிளையின் தன்னியக்க பண இயந்திரம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வங்கியின் தன்னியக்க பண இயந்திரம் கிண்ணியா பிரதேச செயலாளரின் தலைமையில் பொதுமக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வின் போது இலங்கை வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.சி.மகவத்த, கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எச்.எம்.ஜீ.ஆர்.விஜயவர்த்தன, கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ரீ.ரகுரா, கிழக்கு மாகாண கணக்காளர் ஜே.மோகனகிறிசாந் ஆகியோருடன்கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ,கணக்காளர்
நிர்வாக உத்தியோகத்தர் ,மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: