News Just In

7/18/2024 01:05:00 PM

கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு! குருணாகலில்நெகிழ்ச்சி சம்பவம்




குருணாகலில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் குரங்கு தொடர்பான நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

படகமுவ ரிசர்வ் பகுதியில் பால் குடிக்கும் வயதுடைய மூன்று பூனைக்குட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றிற்கு குரங்கு ஒன்று தாயாக மாறியுள்ளது.

குரங்கு ஒன்று பூனைக்குட்டிக்கு பாலூட்டி பாதுகாக்கும் காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

படகமுவ வனப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குட்டியை மீட்பதற்காக 5 நாட்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

எனினும் குரங்கு, பூனை குட்டியை தனது அணைப்பிலிருந்து நழுவ விடாமல் பாதுகாத்துள்ளது. இதனால் அதனை மீட்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்

No comments: