நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
No comments: