News Just In

7/18/2024 01:13:00 PM

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது!



திருகோணமலை வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பணத்தை இலஞ்சமாக வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட வயது (45) என்பவரே இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாவை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கேட்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் உடனடியாக 5,000 ரூபாவை கொடுத்து விட்டு மீதி பணம் 5,000 ரூபாவை நேற்று மாலை 7.20 க்கு கொடுக்கும் போது அதனை பெற்றுக் கொண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: