News Just In

7/05/2024 04:42:00 PM

அம்பாறை திருக்கோவிலில்,தொல்பொருள் அடையாங்களைப்பாதுகாக்கும் செயற்பாடு!





அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள புராதன தொல் பொருள் இடங்கள் மற்றும் சின்னங்களைப் பேணிப் பாதுகாத்தல் தொடர்பாக பொது அமைப்புக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு திருக்கோவிலில்இடம்பெற்றது.விழிப்புணர்வு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில்
பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்இன்று நடைபெற்றது.

கிராம மட்ட மற்றம் பிரதேச மட்ட தொல்பொருள் பாதுகாப்புக் குழுக்களும் இங்கு நிறுவப்பட்டன.திருக்கோவில் பிரதேசத்தில், விநாயகபுரம், தம்பிலுவில் 2 மேற்கு, சாகாமம், கஞ்சிகுடியாறு, தாண்டியடி,சங்கமன்கண்டி, தங்கவேலாயுதபுரம் போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுமார் 47 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: