
செலுத்தப்படாதுள்ள 12 . 5 பில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கு அது சார்ந்த கடன் வழங்குநர்களுடன் இலங்கை அடிப்படை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
இலங்கை பெற்றுக்கொண்ட இறையாண்மை முறிகளிலில் 50 வீத உரிமைகொண்ட 10 தரப்பினர் கடன் வழங்குநர்கள் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இறையாண்மை முறி என்றால் என்ன?
சர்வதேச பகிரங்க சந்தையில் கடனை பெற்றுக்கொள்ளும் முறைமையே இறையாண்மை முறி என்னப்படுகின்றது.
நமது நாடு நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறிய பின்னர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த முறைமையின் கீழ் சர்வதேச சந்தையிடமிருந்து கடன் பெற ஆரம்பித்தது.
இது அதிக வட்டியின் கீழ் பெற்றுக்கொள்ளப்படும் வர்த்தக கடனாகும்.
2022 ஆம் ஆண்டு கடனைச் செலுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதிலிருந்து இதுவரை நமது நாடு இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள 12 .5 பில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறியை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கடனுக்காக சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வட்டியை நமது நாடு செலுத்தவேண்டியுள்ளது.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த நாம் என்ன செய்துள்ளோம்?
நினைவிருக்கின்றதா? அமெரிக்காவின் ஹெமில்டன் ரிசர்வ் வங்கியினால் 250 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை முறிகளை மீள அறவிடுவதற்காக நமது நாட்டிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இறையாண்மை முறிகளை கொள்வனவு செய்த நிறுவனங்கள் சிலவற்றின் சார்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு நமது நாட்டிற்கு இறையாண்மை முறிகளை பெற்றுக் கொடுத்த 10 தரப்பினர் ஒன்றிணைந்து உருவாக்கிய குழு இலங்கையின் கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் விதம் தொடர்பில் கடந்த காலங்களில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.
க்ளிபர்ட் சான்ஸ், லசார்ட் ஆகிய சர்வதேச நீதி மற்றும் நிதி ஆலோசனை நிறுவனங்கள் இலங்கை சார்பாக பேச்சுவார்த்தைகளில் தலையீடு செய்தன.
தகவல்கள் கசியவிடப்படாத கொள்கையின் கீழ் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் தீர்மானமிகு சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 02 ஆம் திகதி பெரிஸ் நகரில் நிறைவடைந்தது.
இறையாண்மை முறிகளின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய இணக்கப்பாடானது இந்த கலந்துரையாடலின் நிறைவில் எட்டப்பட்டது.
இது இணக்கப்பாடு என்ன?
இதுவொரு குழப்பகரமான நடவடிக்கையாகும்.
எனினும், நாம் இதனை இலகுவான முறையில் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது நாம் இறையாண்மை முறிகள் கடன் வழங்குநர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தாத காலப் பகுதிக்காக சுமார் 2 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலரை வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிதியில் 11 வீதத்தை தள்ளுபடிச் செய்வதற்கு தற்போது இறையாண்மை முறிகளின் கடன் வழங்குநர்கள் குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதாவது ஆயிரத்து 678 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த தொகைக்கு புதிதாக இறையாண்மை முறிகளை வௌியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது ப்ளேன் வெனிலா முறிகள் என அழைக்கப்படுகின்றது.
இந்த முறிகளானது 04 வருடங்களுக்காக அமைந்துள்ளதுடன் வட்டியின் அளவு 04 வீதமாக அமைந்துள்ளது.
இவ்வருடம் செப்டெம்பர் 30 ஆம் திகதியிலிருந்து இந்த முறைமையின் கீழ் கொடுப்பனவுகளை செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது மற்றுமொரு கொடுப்பனவும் காணப்படுகின்றது.
அதாவது இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய கடன் வழங்குநர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவே அது.
அந்த தொகை 225 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுவதுடன் அதனை உடனடியாக செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது இதனை விடவும் குழப்பகரமான விடயமாக 08 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலுத்தப்படாத தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையை கூறலாம்.
இதனை 2028 ஆம் ஆண்டிலிருந்து செலுத்த வேண்டும்.
இந்த கடன் தொகையை மீண்டும் செலுத்துவதற்கு மெக்ரோ லின்க் முறைமை பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது எது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் முன்னேற்றமானது இந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக கிடைக்கும் நிவாரணத்திலேயே தங்கியுள்ளது.
2028 ஆம் ஆண்டு இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும்போது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 88 தசம் 6 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் என்ற போதிலும் 28 வீத பெயரளவு கடன் தள்ளுபடி எமக்கு கிடைக்கும்.
உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்தி 100 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தால் 14.96 வீத கடன் தள்ளுபடி கிடைக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 88. 6 வீதத்தை விடவும் குறைவாக இருந்தால் 30 வீதத்துக்கும் குறைவான கடன் தள்ளுபடிக்கான சந்தர்ப்பம் கிட்டும்.
தற்போது மேலும் சுமார் 2 பில்லியன் டொலர் இறையாண்மை முறிகள் கடன் மறுசீரமைப்புக்கு கவர்னன்ஸ் பொன்ட் எனப்படும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது நிர்வாகச் செயற்பாட்டின் சிறந்த முறையின் அடிப்படையில் கடன் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் தீர்மானிக்கப்படும் முறைமையே அது.
எனினும், இந்த முறைமையின் ஊடாக 0.5 வீத கடன் தள்ளுபடிக்கான யோசனை முன்வைக்கப்படுகின்றது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த யோசனைக்கு இலங்கை அரசாங்க தரப்பினர் இறையாண்மை முறிகள் கடன் வழங்குநர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக லண்டன் பங்குச்சந்தைக்கு இன்று(04) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாடு தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிப்பது இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாகும்.
அவர்களின் இணக்கப்பாடு கிடைத்த பின்னர் இறையாண்மை முறிகள் மறுசீரமைப்புடன் தொடர்புடைய உடன்படிக்கையை எட்ட முடியும்.
No comments: