News Just In

7/05/2024 05:03:00 PM

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!





கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாகவே இந்தக் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் சிலர் தமது கைக் குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் நியமனங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்

இதேவேவேளை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளால் நான்காவது நாளாகவும் இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என இவர்கள் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: