News Just In

7/05/2024 05:16:00 PM

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் விடுதியை மூட உத்தரவு. ! வடமாகாண ஆளுநர்



யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,உடனடியாக குறித்த விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிலையம் தொடர்பில்இதற்குமுன்னரும்பலகுற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடனடியாக குறித்த விடுதியை மூடி, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.






No comments: